
பொற்கோவில், வாகா எல்லை, ஜிலேபி… ஆண்ட்ரியாவின் பஞ்சாப் பயணம்
தற்போது பஞ்சாப் மாநிலத்திற்குப் பயணம் சென்றது குறித்தும் பொற்கோவிலில் தரிசனம் செய்தது குறித்தும் பதிவிட்டுள்ளார்.
“நான் எங்கிருந்து தொடங்குவது, ஒரு குறுகிய முற்றிலும் ஆச்சரியமான பயணம். …
பொற்கோவில் என்ன ஒரு ஈர்ப்பு. அமைதியான அழகான ஒரு சன்னதி. அனைத்து மதங்களை சேர்ந்த மக்களையும் வரவேற்கிறது. சுதந்திரத்தின் போது எல்லைகளில் இருந்த மக்கள் எதிர்கொண்ட மிகப் பெரிய கஷ்டங்களை "பார்ட்டிஷன் மியுசியம்" உண்மையில் என் கண்களைத் திறந்தது. இது வாகா எல்லைக்கு அழைத்துச் செல்கிறது. ஒரு தனித்தவதமான "பிஎஸ்எப் சந்திப்புகள்" அரங்கம் என்று மட்டுமே விவரிக்கக் கூடிய இடத்தில் பல இந்தியர்கள் உற்சாகமாக இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், சாப்பிடுவதில் நான் பிஸியாக இருந்தேன் என்பதை ஒப்புக் கொள்ள வெட்கப்படவில்லை. லஸ்ஸி, அம்ரிட்சர் குல்சா, சோலே, எனது அபிமான ஜிலேபி.
கடைசியாக ஒன்று... ஷாப்பிங். எல்லா இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வண்ணமயமான புல்காரி துணிகள் கண்களுக்கு விருந்து. விலைகளுமே உண்மையாக நன்றாகவே இருந்தன. இந்தப் பயணத்திற்குப் பிறகு சீக்கிய சமூகத்தின் மீதான எனது மரியாதையும் அபிமானமும் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!