
2028ல் புஷ்பா 3 வெளியாகும் : தயாரிப்பாளர் தகவல்
அப்படத்தின் மூன்றாம் பாகம் பற்றிய அப்டேட் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். "புஷ்பா 3" படம் 2028ம் ஆண்டு வெளியாகும் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் ரவிசங்கர் கூறுகையில், ""புஷ்பா மூன்றாம் பகம் கண்டிப்பாக எடுப்போம். அட்லி, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் அடுத்தடுத்து கமிட்டாகி இருக்கிறார். அதை முடித்துவிட்டு புஷ்பா மூன்றாம் பாகத்தில் நடிப்பார். இயக்குநர் சுகுமாரும் ராம் சரணுடனான படத்தை முடித்துவிட்டு "புஷ்பா 3" படத்திற்கான வேலைகளை துவங்குவார். 2028ல் "புஷ்பா 3" திரையரங்கிற்கு வரும்" எனக் கூறியுள்ளார்.
முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் இடையிலும் மூன்று வருட இடைவெளி இருந்தது. ஆனால், மூன்றாம் பாகத்திற்கான இடைவெளிக்கு அல்லு அர்ஜுன் வேறு இரண்டு படங்களில் நடிக்க இருப்பதுதான் காரணம்.
மூன்றாம் பாகம் பற்றிய அப்டேட்டைத் தயாரிப்பாளர் தந்ததற்கு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!