
பிளாஷ்பேக் : உலக போர், சென்னை மாகாணத்தை கிண்டல் செய்த படம்
அதை தொடர்ந்து போரில் இந்திய வீரர்களின் தியாகம், ஆங்கில அரசின் நேர்மையான நிலைப்பாடு இவற்றை மையமாக கொண்டு படங்கள் வந்தன. இந்த படங்களுக்கு இடையே போரின் காரணமாக மக்கள் படும் அவஸ்தை மிக கடுமையான விலையேற்றம் இவற்றை கண்டித்தும், சென்னை மாகாண அரசை கிண்டல் செய்தும் வெளியான படம் "மிஸ்.மாலினி".
ஆர்.கே.நாராயண் எழுதிய "மிஸ்டர் சம்பத்" நாவலை மையமாக வைத்து, கொத்தமங்கலம் சுப்பு திரைக்கதை எழுதி இயக்கி அவரே நாயகனாகவும் நடித்த படம், கதாநாயகி மாலினியாக நடித்தவர் புஷ்பவல்லி. ஜாவர் சீதாராமன், எம்.எஸ்.சுந்தரி பாய், எஸ்.வரலட்சுமி உட்பட பலர் நடித்தனர். இதில்தான் ஜெமினி பிலிம்சில் மானேஜராக இருந்த கணேசன் சிறிய வேடம் ஒன்றில், அறிமுகமானார். பின்னர் அவர் ஜெமினி கணேசன் ஆனார்.
புகழ்பெற்ற நாடக நடிகையான மாலினி ஒரு சாதாரண மனிதனை காதலித்து அவனை மட்டுமே நம்பி வாழ்க்கையை தொலைத்து பின்னர் மீண்டும் நாடகத்திற்கே திரும்பி வருவது மாதிரியான கதை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!