
பிளாஷ்பேக் : ஜெயலலிதாவை பாடகியாக்கிய கே.வி.மகாதேவன்
1969ம் ஆண்டு வெளிவந்த "அடிமைப்பெண்" படத்தில்தான் ஜெயலலிதாவின் பாடகி அறிமுகம் நடந்தது. பல வருடம் சிறையில் இருந்து மீண்ட எம்ஜிஆருக்கு அவரது தாயின் அன்பை சொல்லும் பாடலாக உருவானதுதான் "அம்மா என்றால் அன்பு". இந்த பாடலை முதலில் பி.சுசீலாதான் பாடுவதாக இருந்தது. ஆனால் படத்தில் ஜெயலலிதா இந்த பாடலுக்கு நடிப்பதால் அவரே பாடினால் நன்றாக இருக்கும். கணீர் குரலுக்கு சொந்தக்காரரான ஜெயலலிதான அன்பு பெருகும் ஒரு பாடலை பாடினால் வித்தியாசமாக இருக்கும் என்று கருதிய கே.வி.மகாதேவன் அவரையே பாட வைத்தார்.
அதன் பிறகு ஜெயலிதா ஓ மேரா தில்ருபா (சூரியகாந்தி), கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம் கன்னம் இரண்டும் ஐஸ்க்ரீம் (வந்தாளே மகராசி) .உலகம் ஒருநாள் பிறந்ததுஅது ஊமையாகவே இருந்தது (திருமாங்கல்யம்), சித்திர மண்டபத்தில் சில முத்துகள் கொட்டி வைத்தேன் (அன்பைத் தேடி) உள்ளிட்ட பல பாடல்களை பாடினார்.
ஜெயலலிதா என்னும் பாடகியை உருவாக்கிய கே.வி.மகாதேவனின் 107வது பிறந்த நாள் இன்று.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!