
டான்சர் என்ற முத்திரையை உடைக்க விரும்பும் ஸ்ரீலீலா
தற்போது தெலுங்கில் நிதின் உடன் ‛ராபின்ஹுட்" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்பட விழாவில் பேசிய தொகுப்பாளர், ‛‛லீலா என்றால் பாட்டு, பாட்டு என்றால் நடனம், நடனம் என்றால் லீலா"" என்றார். இதற்கு உடனடியாக பதிலளித்த ஸ்ரீலீலா, ‛‛லீலா என்றால் வசனம், வசனம் என்றால் நடிப்பு, நடிப்பு என்றால் லீலா. இதற்காகவே இந்த படத்தில் நடித்தேன்"" என்றார்.
தனது நடிப்பு பேசப்படுவதை விட நடனம் ஆடுவது தான் பேசப்படுகிறது. இதனால் தன் மீது டான்சர் என்ற முத்திரை விழுந்துவிட்டது. இதை உடைத்து நடிகை என்று கூற வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு பதிலை அளித்துள்ளார் ஸ்ரீலீலா.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!