
விடாமுயற்சி வசூலைக் கடந்த டிராகன்
"விடாமுயற்சி" படம் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த வசூல் விவரமும் வெளியிடப்படவில்லை. ஆனால், சுமார் 150 கோடி வரை வசூலித்திருக்கலாம் என்கிறார்கள். அதேசமயம் "டிராகன்" படத்தின் 100 கோடி வசூல் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். தற்போது இந்தப் படம் 150 கோடி வசூலைக் கடந்துள்ளதாம்.
தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் பட வசூலை வளர்ந்து வரும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் "ஓவர் டேக்" செய்தது குறித்து சினிமா வட்டாரங்களில் ஆச்சரியத்துடன் பேசி வருகிறார்கள்.
அஜித் நடித்து அடுத்து வர உள்ள "குட் பேட் அக்லி" பட வசூல் சிறப்பாக இருக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு "குட் பேட் அக்லி" படம் "குட்" ஆக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், "விடாமுயற்சி" போல "பேட்" ஆக இல்லாமல் இருக்க வேண்டும்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!