
7.47 கோடி ரூபாய் வாட்ச் அணியும் ஜுனியர் என்டிஆர்
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஜுனியர் என்டிஆர், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்ச்சை அணிவதாக ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் "வார் 2" ஹிந்திப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் மும்பை ஏர்போர்ட்டில் இறங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்து அதைக் கண்டுபிடித்துள்ளனர்.
“ரிச்சர்ட் மில்லி ஆர்எம் 40-01 டர்பில்லோன் மெக்லரன் ஸ்பீட்டெய்ல்” என்பது அந்த வாட்ச்சின் பெயர். அதன் விலை சுமார் 7 கோடியே 47 லட்சம் என்கிறார்கள்.
ஜுனியர் என்டிர் தற்போது "வார் 2" ஹிந்திப் படத்திலும், கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தனது 31வது படத்திலும் நடித்து வருகிறார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!