
பிளாஷ்பேக்: முதல் கன்னடத்து பசுங்கிளி
சரோஜா தேவி முதல் இன்றைய ராஷ்மிகா மந்தனா வரை கன்னட சினிமா, தமிழ் சினிமாவுக்குக் கதாநாயகிகளை வாரி வழங்கி வந்திருக்கிறது. அவர்களில் எத்தனையோ பேர் இங்கே புகழையும் பொருளையும் ஈட்டியிருந்தாலும், முதன் முதலில் கணக்கைத் தொடங்கியவர் எம்.வி.ராஜம்மா.
"யயாதி" என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 1940ல் வெளியான "உத்தமபுத்திரன்" படத்தில் பி.யு.சின்னப்பா ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். கன்னடத்தை விட தமிழிலேயே அதிகமான படங்களில் நடித்துள்ளார். 1943ம் ஆண்டு "ராதா ரமணா" என்ற கன்னட படத்தை தயாரித்தார். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவின் முதல் பெண் தயாரிப்பாளர் ஆனார். பிற்காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்தார். 1999ம் ஆண்டு காலமானார்.
இன்று அவரது 104வது பிறந்த நாள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!