
விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் ரவுடி ஜனார்த்தனா
சமீபத்தில் மகேஷ் பாபு, வெங்கடேஷ் நடிப்பில் கடந்த 2013ல் வெளியான சீதம்மா வஹிட்லோ ஸ்ரீமல்லி செட்டு என்கிற படத்தின் ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தில் ராஜு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது விஜய் தேவர்கொண்டாவின் படத்திற்கு ரவுடி ஜனார்த்தனா என டைட்டில் வைக்க இருப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் விஜய் தேவரகொண்ட நடித்து வந்த அவரது படத்திற்கு பல நாட்களாக தலைப்பு வைக்கப்படாமல் பில்டப் கொடுத்து சமீபத்தில் கிங்டம் என டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், இன்னும் ஆரம்பிக்கவேபடாத விஜய் தேவரகொண்டாவின் பட டைட்டிலை அதன் தயாரிப்பாளரே இப்படி எந்த பில்டப்பும் இல்லாமல் போட்டு உடைத்து விட்டார் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!