
17வது எடிசன் திரை விருதுகளுக்கான முன்னோட்டம் : சதீஷ் பங்கேற்பு; ஆன்லைனில் ஓட்டுப்பதிவு துவக்கம்
சதீஷ் பேசுகையில், ‛‛சினிமாவை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அவர் பெயரில் விருது வழங்க வேண்டும் என எண்ணம் தோன்றியது செல்வகுமாரையே சாரும். கடத்த 16 ஆண்டுகளாக பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், என சினிமா துறைக்கு தொடர்ந்து விருது வழங்கிய ஊக்குவித்து வருகிறார்"" என்றார்.
தொடர்ந்து இந்த விருது நிகழ்வில் போட்டியிடும் பல்வேறு படங்கள், திரைப்பிரபலங்களுக்கு ஓட்டளிக்கும் நிகழ்வும் ஆன்லைனில் துவங்கியது. சதீஷ் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஓட்டளித்தனர்.
ஏப்ரல் ஐந்தாம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஸ்பைஸ் அரேனா அரங்கில் எடிசன் திரை விருதுகள் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் முதன் முறையாக பினாங்கில் நடக்கவிருக்கும் எடிசன் பிலிம் பெஸ்டிவலில் அமரன், மகாராஜா, விடுதலை 2, மெய்யழகன், லப்பர் பந்து ஆகிய 5 படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் எடிசன் திரை விருது ரசிகர்களுக்கு தங்களுக்கு பிடித்தமான நடிகரின் படம் போட்ட டி-ஷர்டையும் (T-Shirt) விற்பனை செய்ய உள்ளதாக செல்வகுமார் தெரிவித்தார்.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!