
சாகும் வரை நான் சீதா தான் - ராமாயண் தீபிகா
ராமாயணத்தை மையமாக வைத்து விதவிதமாக எவை வந்தாலும், "டிடி நேஷனல்" டிவியில் 1987ம் ஆண்டில் ஒளிபரப்பான "ராமாயண்" தொடரை மிஞ்சும் அளவுக்கு எதுவும் இதுவரை வரவில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் அத்தொடரில் சீதாவாக நடித்த தீபிகா கூறியதாவது, ""ராமாயணத்தை மையமாக வைத்து உருவான ஒரு டிவி தொடரில் கவுசல்யா கதாபாத்திரத்தில் நடிக்க என்னை கேட்டார்கள். எனது கணவர் என்னையே முடிவெடுத்துக் கொள்ளச் சொன்னார். ஆனால், எனது சகோதரர், "நீங்கள் சீதாவாக அறியப்பட்டவர். சாகும் வரை சீதாவாகவே இருக்க வேண்டும், என்று சொன்னார். அவர் சொன்ன வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது.
இத்தனை ஆண்டு காலமாக ரசிகர்கள் மனதில் நான் சீதாவாகவே இருக்கிறேன். அந்த இமேஜை நான் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும். நான் சீதா தான், அதை ஏற்றுக் கொண்டுள்ளேன். 38 வருடங்களாக மக்கள் என்னை இன்னும் அப்படியேதான் ஞாபகம் வைத்துள்ளார்கள்,"" என்றும் தெரிவித்துள்ளார்.
தீபிகா தமிழில் "பெரிய இடத்து பிள்ளை, நாங்கள்" ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!