
பழம்பெரும் நடிகை பிந்து கோஷிற்கு உதவிய கேபிஒய் பாலா!
ஆரம்பத்தில் பிந்து கோஷின் நிலை தெரிந்து அவருக்கு உதவிய சக நடிகர்களும் தற்போது அவரை கண்டுகொள்ளவில்லை என்பதால் மிகவும் கஷ்டப்படுகிறார். இதுகுறித்து நடிகை ஷகீலா சமீபத்திய பேட்டிகளில் அதிகமாக பேசியும் அவருக்காக உதவியும் கேட்டு வந்தார்.
இந்நிலையில், கேபிஒய் பாலா, நடிகை ஷகீலாவுடன் பிந்து கோஷின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்திருக்கிறார். பிந்து கோஷிற்கு பாலா யார் என்றே தெரியாது. ஆனாலும், பாலா பிந்து கோஷிற்கு 80000 ரூபாய் தந்து உதவியுள்ளார். மேலும், தன்னால் முடிந்த உதவியை தொடர்ந்து செய்வதாகவும், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்றும் நம்பிக்கை அளித்து பேசியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!