
நாம ‛குட்-ஆ இருந்தாலும் உலகம் ‛பேட்-ஆக்குது : குட் பேட் அக்லி டீசர் வெளியானது
ஒரு நிமிடம் 34 நொடிகள் கொண்ட இந்த டீசரில் அஜித்தின் மாஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இளமையான லுக், சால்ட் அண்ட் பெப்பர் லுக் என அஜித் ஸ்டைலாக உள்ளார். அதோடு கார் ஸ்டன்ட், மாஸ் ஆக் ஷன் காட்சிகள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன.
‛‛ஏகே ஒரு ரெட் டிராகன்... அவன் போட்ட ரூல்ஸ அவனே பிரேக் பண்ணிட்டு வந்து இருக்கானா அவன் மூச்சுலேயே முடிச்சுடுவான்..., நாம எவ்வளவு தான் ‛குட்"-ஆ இருந்தாலும் இந்த உலகம் நம்மள ‛பேட்"-ஆக்குது..., வாழ்க்கைல என்னெல்லாம் பண்ணக்கூடாதோ சில சமயம் அதெல்லாம் பண்ணனும் பேபி..."" போன்ற பஞ்ச் டயலாக்குகளும் இடம் பெற்றுள்ளன. டீசரை பார்க்கையில் இது ஒரு கேங்ஸ்டர் கதை என புரிகிறது.
விடாமுயற்சி படத்தின் தோல்விக்கு பின் அஜித் ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் முன்னோட்டமாக டீசர் அமைந்துள்ளது. படமும் சிறப்பாக அமைந்தால் நிச்சயம் வசூல் சாதனை புரியலாம்.
டீசர் லிங்க்.... : https://www.youtube.com/watch?v=jl-sgSDwJHs




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!