
சப்தம் படத்தின் காலை காட்சி வெளியாகவில்லை
இந்த படம் இன்று(பிப்., 28) திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் காலையில் வெளியாகவில்லை. ஓடிடி மற்றும் சாட்டிலைட் பிரச்னையால் இந்த படத்தின் காலை காட்சி ரிலீஸாகவில்லை என கூறப்படுகிறது. அதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து தற்போது நண்பகலுக்கு பின் காட்சிகள் ஓபன் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தப்படம் நீண்டகால தயாரிப்பில் இருந்தது. அதுமட்டுமல்ல படத்தின் டிரைலர் மற்றும் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி படம் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வரும் நிலையில் படத்தின் காலை காட்சி வெளியாகாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!