
அமெரிக்கா - விடாமுயற்சி வசூலை நெருங்கும் டிராகன்
பிரதீப் ரங்கநாதன் நடித்த "டிராகன்" படம் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியானது. அமெரிக்காவில் மூன்று நாட்களில் மட்டும் 6,50,000 யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். "விடாமுயற்சி" வசூலுடன் ஒப்பிடும் போது இதுவும் சிறந்த வசூல்தான். இந்த வார இறுதியிலும் இப்படத்திற்கான வரவேற்பு அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். "விடாமுயற்சி" வசூலை முறியடித்து ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை "டிராகன்" படம் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் "டிராகன்" படம் 50 கோடி வசூலைக் கடந்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். இந்த வார இறுதிக்குள் 100 கோடி வசூல் கடந்துவிடும் என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!