
கன்னடம், ஆங்கிலத்தில் படமாகும் டாக்சிக்
ஆனால், "கேஜிஎப்" புகழ் யஷ் தற்போது நடித்து வரும் பான் இந்தியா படமான "டாக்சிக்" படத்தை கன்னடத்தில் மட்டுமல்லாது, ஆங்கிலத்திலும் சேர்த்தே படமாக்கி வருகிறார்களாம். உலக அளவில் வெளியிட ஏதுவாக ஆங்கிலத்தில் எடுக்கிறார்கள். மற்ற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளில் சிலவற்றிலும் படத்தை டப்பிங் செய்ய உள்ளார்களாம்.
"கேஜிஎப் 2" படம் மூலம் 1000 கோடி வசூலையும், உலக அளவில் கவனத்தையும் ஈர்த்தவர் யஷ். அவர் நடித்து வரும் "டாக்சிக்" படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, டொவினோ தாமஸ், மாளவிகா மோகனன், பசில் ஜோசப், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!