
15 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ஆயிரத்தில் ஒருவன்!
கடந்த 2010ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் இணைந்து நடித்து தமிழில் வெளிவந்த படம் "ஆயிரத்தில் ஒருவன்". இப்படம் "யுகந்நிக்கி ஒக்கடு" எனும் பெயரில் தெலுங்கு பதிப்பில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வெளியானது. இப்படம் வெளிவந்த காலகட்டத்தில் தமிழில் வெற்றி பெறவில்லை. ஆனால், தெலுங்கு பதிப்பில் யாரும் எதிர்பாராத விதமாக மாபெரும் படமாக அமைந்தது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கு பதிப்பில் வருகின்ற மார்ச் 14ம் தேதி அன்று இந்தியளவில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் மற்றும் அமெரிக்கா நாட்டிலும் ரீ ரிலீஸ் செய்வதக அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!