சூர்யா, லோகேஷ் படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம்
பிப் 19, 2025
Advertisement
கன்னட சினிமாவை சார்ந்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தற்போது விஜய்யை வைத்து "ஜனநாயகன்" என்ற படத்தை தயாரித்து வருகின்றனர். இதன் மூலம் தமிழில் இன்னும் பல படங்களை தயாரிக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் 2022ம் ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா "ரோலெக்ஸ்" என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். அது மிகவும் பிரபலமானது.
அதன்பிறகு ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை தனியாக வைத்து திரைப்படமாக உருவாக்க உள்ளதாக தெரிவித்தனர். தற்போது லோகேஷ் கனகராஜ், சூர்யா கூட்டணியில் உருவாகும் ரோலெக்ஸ் படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!