
ரீ என்ட்ரி ஆகும் காதல் ஓவியம் கண்ணன்
தற்போது தொழிலதிபராக இருக்கும் கண்ணன் "சக்தி திருமகன்" படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். அருவி மற்றும் வாழ் படத்தின் இயக்குனரான அருண் பிரபு இந்த படத்தை இயக்குகிறார்.
விஜய் ஆண்டனி நடிக்கும் 25வது படம் இது. விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், திருப்தி ரவீந்திரன், கிரண், ரியா ஜித்து, ஷோபா விஸ்வநாத் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் கேசவ் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார், ஷெல்லி ஒளிப்பதிவு செய்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!