
அல்லு அர்ஜுன் - அட்லி படம் பற்றி அப்டேட்ஸ் தரும் பாலிவுட்
இதனிடையே, அட்லி இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் சம்மதம் தெரிவித்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வர ஆரம்பித்தன. சல்மான்கானுக்காக கதை எழுதி வந்த அட்லி, அதன் பட்ஜெட் அதிகமானதால் தயாரிப்பாளர்கள் பின் வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள். அந்த பட்ஜெட்டிற்கு அல்லு அர்ஜுன் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என பேசி முடிவெடுத்தார்கள் என்றும் செய்திகள் வந்தது.
பாலிவுட் மீடியாக்கள் இந்தப் படம் பற்றி கூடுதலாக அப்டேட்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். படத்தின் நாயகியாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேசியுள்ளதாகவும், ஹிந்தி நடிகர் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், அல்லு அர்ஜுன் அப்பா கதாபாத்திரத்தில் சீனியர் தமிழ் நடிகர் நடிக்கப் போகிறார் என்றும் சொல்கிறார்கள். இசையமைப்பதற்கு சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல்.
ஏப்ரல் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகவும் பாலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!