
சூர்யா படத்தலைப்பு 760 சிசி ? நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் ஒப்பந்தம்
இதைத்தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாகிறது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இது சூர்யாவின் 46வது படமாக உருவாகிறது.
இப்படம் இந்தியாவில் முதல் இஞ்சின் எப்படி தயாரிக்கப்பட்டது என்பது குறித்த கதையில் உருவாக உள்ளதாம். அதன் காரணமாக இந்த படத்துக்கு "760 சிசி" என்று தலைப்பு வைப்பதற்கு இயக்குனர் வெங்கி அட்லூரி பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!