
இசை ஆல்பம் மூலம் தமிழுக்கு வரும் குஷி ரவி
வார் ஹார்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில், தீபா லக்ஷ்மண் பிரபு தயாரிப்பில் சத்தியசீலன் இயக்கத்தில் பிரியா மாலி இசையில் விவேக் வரிகளில் உருவாகி உள்ள ஆல்பம் "பட்டி". இதில் தர்ஷன், குஷி ரவி நடித்து ஆடி உள்ளனர். இதனை இயக்கி உள்ள சத்யசீலன், லோகேஷ் கனகராஜின் உதவியாளர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த ஆல்பம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. சுதந்திரமான பெண்ணாக வாழும் தீபாவுக்கு பைக் ஓட்டுவது, துல்லிய ஒலிகளை கேட்பது என்றால் கொள்ளை பிரியம். அவர் தன் காதலை "பட்டி" என்று செல்லமாக அழைக்கிறார். காதலர்கள் இருவரும் ஏற்காட்டுக்கு பைக்கில் செல்லும் போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. இது அவர்களது வாழ்க்கையை எப்படி புரட்டி போட்டது என்பது தான் ஆல்பத்தின் கதை. பிரவீன் ஜி நடனம் அமைத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!