
இதயம் முரளி ஆக மாறிய அதர்வா
இன்று(பிப்., 13) இப்படத்திற்கு "இதயம் முரளி" என தலைப்பு வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர் முரளியின் அடையாளமாக இதயம் படம் உள்ளது. அதையே இப்போது படத்திற்கு தலைப்பாக்கி உள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதில் நட்டி நட்ராஜ், பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், பிரக்யா நக்ரா, ரக் ஷன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் அறிமுக டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 5 நிமிடம் ஓடக்கூடிய அந்த டீசரில் அதர்வாவின் காதல், காதல் பிரேக்-அப் மாதிரியான விஷயங்கள் உள்ளன. மேலும் இந்த உலகத்தில் பெஸ்ட் லவ்வர் ரோமியோவோ, மஜ்னுவோ, அம்பிகாபதியோ... ஏன் டைட்டானிக் ஜாக் கூட இல்ல... நம்ம இதயம் முரளி தான்டா என்ற வசனம் உள்ளது. இதை வைத்து பார்க்கையில் படம் முழுக்க முழுக்க காதல் கதை என புரிந்து கொள்ள முடிகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.
டீசர் லீங்க் : https://www.youtube.com/watch?v=kdvlqnNqUVU




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!