
விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ்
இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், "" கிராம பின்னணியில் அனைவரது மனதையும் கவரும் வகையில் குடும்ப பொழுதுபோக்கு படமாக "லவ் மேரேஜ்" தயாராகிறது. தாமதமான திருமணம் என்ற சூழலில் போராடும் ஆண்களின் நகைச்சுவையான மற்றும் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய சம்பவங்களை மையமாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது"" என்றார்.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!