
புதிய தலைவன் பிறப்பான் : சூர்யா குரலில் வெளிவந்த விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் டீசர்
இந்த படத்திற்கு "கிங்டம்" என தலைப்பு வைத்துள்ளதாக டீசர் வீடியோ உடன் அறிவித்துள்ளனர். தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். தெலுங்கு டீசருக்கு ஜுனியர் என்டிஆரும், ஹிந்தி டீசருக்கு ரன்பீர் கபூரும் குரல் கொடுத்துள்ளார்கள்.
ஆக்ஷன் மற்றும் உணர்வுகள் நிரம்பிய படமாக உருவாகியுள்ள கிங்டம் டீசர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டீசர் வெளியான 12 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இது ரசிகர்களுக்கும் சிறந்த டீசர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. ‛‛புதிய அரசு, புதிய தலைவன் பிறப்பான்"" என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது. மேலும், இப்படம் இவ்வருடம் மே 30ம் தேதி அன்று திரைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!