
பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி
அந்த வகையில், பாடகியும், பவதாரிணியின் தோழியுமான ஷாலினி சிங் கூறியிருப்பதாவது: பவதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்தப் பாடல்களை நீங்கள் எவ்வளவு நேசித்தீர்கள் என்பது எனக்குத் தெரியும், உங்கள் பிறந்தநாளில், எனக்குத் தெரிந்த விதத்தில் - இசை மூலம் -உங்களை கவுரவிக்க விரும்பினேன். உங்கள் தந்தை மேஸ்ட்ரோ இளையராஜாவுக்காக நீங்கள் மிகவும் அழகாகப் பாடிய பாடல்களையும் ஒன்றிணைக்கிறது.
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஆகிறது. ஆனால் உங்கள் குரல், உங்கள் சிரிப்பு மற்றும் நாங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகள் அப்படியே உள்ளன. இந்த அஞ்சலி உங்களைக் கொண்டாடுவதற்கான எனது வழி. உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம், எப்போதும் நினைவில் வைத்திருக்கிறோம், என்றென்றும் நேசிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் படத்தில் ஏ ஐ தொழில் நுட்பம் மூலம் பவதாரணி குரலை அவரது சகோதரர்களுக்கான யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகிய அழகாக ரீ கிரியேட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!