
சூர்யாவின் ரெட்ரோ படத்தின் கண்ணாடி பூவே சிங்கிள் பாடல் நாளை வெளியாகிறது!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் "ரெட்ரோ". அவருடன் பூஜாஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தில் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 13ம் தேதியான நாளை இந்த ரெட்ரோ படத்தின் "கண்ணாடி பூவே" என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாவதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஒரு போஸ்டர் உடன் தனது இணைய பக்கத்தில் அறிவித்துள்ளார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!