
எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி
அந்த வீடியோவில் ரஜினி பேசி இருப்பதாவது: ஒய்.எஸ்.எஸ். ராஞ்சி ஆசிரமத்துக்கு 3 தடவை வந்துள்ளேன். பரமஹம்ச யோகானந்தாஜியின் அறையில் அமர்ந்து யோகா செய்யும் பாக்கியம் கிடைத்தது. அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆசிரமத்துக்கு வந்துள்ளேன். இனி வருடாவருடம் இங்கு வந்து, சுமார் ஒரு வாரம் தங்குவது என்று முடிவு எடுத்துள்ளேன்.
நான் மிகவும் "வைப்" ஆக இருப்பதாகவும், என்னை பார்த்தால் ஒரு "பாசிட்டிவ் வைப்" வருகிறது என்கிறார்கள். அதன் ரகசியமே நான் கிரியா யோகா பயிற்சி செய்து வருவது தான். 2002ம் ஆண்டு முதல் கிரியா யோகாவில் ஈடுபட்டு வருகிறேன். தொடக்கத்தில் எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆனாலும் நிறுத்தவில்லை. ஒருகட்டத்தில், அதாவது 12 வருடங்கள் ஆன பிறகுதான் மாற்றத்தை உணரமுடிந்தது. எனக்குள் ஒரு நிம்மதி, அமைதி இருந்தது.
கிரியா யோகாவின் சக்தி என்பது, அதை தெரிந்து கொண்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். இது ஒரு பரம ரகசியம். இது எல்லோருக்குமே பயன்பட வேண்டும். நல்ல குருவை நாம் தேடிக் கண்டுபிடித்து விட்டால் பிறகு அவர்களை நாம் விட்டாலும், நம்மை அவர்கள் விட மாட்டார்கள்.
இவ்வாறு ரஜினி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!