ஸ்வீட் ஹார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிப் 06, 2025
Advertisement
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் ரியோ ராஜ். பிளான் பண்ணி பண்ணணும், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, ஜோ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் "ஸ்வீட் ஹார்ட்" எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதனை அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ். சுகுமார் என்பவர் இயக்கியுள்ளார்.
இதில் கதாநாயகியாக சுழல் வெப் தொடரில் நடித்த கோபிகா ரமேஷ் நடிக்கின்றார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 14ம் தேதி அன்று திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இளைஞர்களை கவரும் விதமாக காதல் கதையில் இந்தப்படம் உருவாகி உள்ளது.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!