
கதை நாயகன் ஆனார் ராமர்
இந்த நிலையில் "அது வாங்குனா இது இலவசம்" என்ற படத்தின் மூலம் கதை நாயகன் ஆகியிருக்கிறார். ஸ்ரீஜா சினிமாஸ் சார்பில் செந்தில் ராஜன் தயாரித்து, இயக்குகிறார். கதாநாயகியாக கன்னட நடிகை பூஜாஸ்ரீ நடித்துள்ளார். மேலும் கலையரசன், சூப்பர் குட் சுப்பிரமணி, மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண், அம்மையப்பன் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்வின் ராஜ் இசை அமைத்துள்ளார், விக்னேஷ் மலைச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குன் செந்தில்ராஜன் கூறும்போது, “ஒரு சிலர் செய்யும் தவறுகளால் மற்றவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். அதனால் என்ன விஷயங்கள் நடக்கின்றன என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. இதுவரை பார்க்காத ஒரு ராமரை இந்த படத்தில் பார்க்கலாம். இந்த படத்திற்குப் பிறகு நிச்சயம் வடிவேலு போல மிகப்பெரிய அளவில் அவர் பேசப்படுவர்” என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!