
ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி பெற வைப்பது உங்கள் கடமை: கவுண்டமணி
வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இயக்குனர் கே.பாக்யராஜ் பி.வாசு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கவுண்டமணி ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சி என்பதால் அவரது பேச்சை கேட்க ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். நல்ல கண்டெண்ட் கிடைக்கும் என்று மீடியாக்களும் காத்திருந்தனது.
கவுண்டமணி பேசியதாவது: ""அனைவரும் "ஒத்த ஓட்டு முத்தையா" படத்தை பற்றி நிறைய பேசி விட்டார்கள். பிறகு நான் என்ன பேசுவது? தயாரிப்பாளர் ரவி ராஜா இந்த திரைப்படத்தை சிறந்த முறையில் தயாரித்திருக்கிறார். இந்தப் படம் குடும்பத்துடன் காண வேண்டிய படம். இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள், மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் ரசிகர்கள், வருகை தராமல் வீட்டில் இருக்கும் ரசிகர்கள், வெளியூரில் இருக்கும் ரசிகர்கள், வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்கள், ஹாலிவுட்டில் இருக்கும் ரசிகர்கள் என அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த "ஒத்த ஓட்டு முத்தையா"வை பாருங்கள். இந்த "ஒத்த ஓட்டு முத்தையா"வை நன்றாக பாருங்கள். இந்த "ஒத்த ஒட்டு முத்தையா"வை திரும்பத் திரும்ப பாருங்கள். நான் திரும்பவும் சொல்கிறேன். "ஒத்த ஒட்டு முத்தையா"வை பாருங்கள். திரும்பத் திரும்ப சொல்கிறேன். "ஒத்த ஓட்டு முத்தையா"வை பாருங்கள். திரும்பிப் பார்த்துவிட்டும் சொல்கிறேன். "ஒத்த ஓட்டு முத்தையா"வை பாருங்கள். பார்க்க மறந்து விடாதீர்கள். இந்த "ஒத்த ஒட்டு முத்தையா"வை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள். அது உங்கள் கடமை. அது உங்களுடைய பொறுப்பும் கூட" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!