
‛குட் பேட் அக்லி படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்படும் அஜித்தின் சூப்பர் ஹிட் பாடல்
இந்த படத்துக்காக உடல் எடையை குறைத்து ஸ்டைலிசான கெட்டப்பில் நடித்திருக்கிறார் அஜித். இதில் ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா படத்தில் இடம்பெற்ற ‛வத்திக்குச்சி பத்திக்காதுடா" என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அஜித் ரசிகர் மத்தியில் அமோகமான வரவேற்பு பெற்ற இந்த பாடலை புதுமையான முறையில் அவர் ரீமிக்ஸ் செய்துள்ளாராம்.
இதுபோன்று மார்க் ஆண்டனி படத்திலும் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி என்ற பாடலை ஜி. வி .பிரகாஷ் குமார் ரீமிக்ஸ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!