
கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே நடிக்கும் அக்கா
நடிகை கீர்த்தி சுரேஷ், "பேபி ஜான்" படத்தின் மூலம் ஹிந்தியில் கால் பதித்தார். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் பரிச்சயமான நடிகையாக மாறியுள்ளார். இடையில் தனது காதலரை திருமணம் முடித்த அவர், தற்போது "ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி" ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ராதிகா ஆப்தே உடன் இணைந்து "அக்கா" எனும் வெப் தொடரிலும் நடித்து முடித்துள்ளார். இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகிறது. இதன் டீசர் நேற்று (ஜன.,03) வெளியிடப்பட்டது. தர்மராஜ் எழுதி இயக்கியுள்ள இத்தொடரில் கீர்த்தி சுரேஷ் மிரட்டலான தாதா போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!