
பிளாஷ்பேக் : நெருக்கமான காட்சிகளால் விமர்சனத்தையும், வெற்றியையும் பெற்ற படம்
இவர்கள் தவிர வி.என்.ஜானகி, டி.ஏ.மதுரம், காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், நாகலட்சுமி, கல்யாணி, "ஆழ்வார்" குப்புசாமி, "புலிமூட்டை" ராமசாமி, இ.கிருஷ்ணமூர்த்திபா குஞ்சிதா மற்றும் எம்.கிருஷ்ணமூர்த்தி குஞ்சிதா ஆகியோரும் நடித்திருந்தார்கள். கே.சுப்ரமணியம் இயக்கி இருந்தார்.
இந்த படத்தில்தான் முதன் முறையாக ஆண் நடிகர்களும், பெண் நடிகைகளும் மிகவும் நெருக்கமாக தொட்டு பேசி, கட்டிப்பிடித்து நடித்திருந்தார்கள். அதோடு படத்தின் நாயகியாக நடித்த ஜெயம்மா கன்னடத்தில் முன்னணி நடிகை அவர் நல்ல கேரக்டர்களிலேயே நடித்தார். ஆனால் இந்த படத்தில் மன்னரை மயக்கும் விலைமாதுவாக நடித்தார். காமெடி நடிகரான என்.எஸ்.கிருஷ்ணன் இதில் வில்லன். மன்னருக்காக மக்களிடம் கொள்ளை அடிப்பவராக நடித்தார். அதோடு மன்னரின் மனைவி ஜெயம்மாவுடம் கள்ள தொடர்பு வைத்திருப்பவராகவும் நடித்தார்.
நெருக்கமான காட்சிகள், ஜெயம்மா, என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த கேரக்டர்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் அதுவே படத்தை வெற்றி பெறவும் வைத்தது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!