
விடாமுயற்சி படத்திற்கு யுஏ சான்றிதழ்
நேற்றிரவு இப்படத்தின் டிரைலர் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இதில் இயக்குனர் மகிழ் திருமேனி, அஜித்திடம் காட்சிகளை விளக்குவதும், ஆக்ஷன் காட்சிகளை படமாக்கும் விதமும் இடம்பெற்றிருந்தது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்திற்கு "யுஏ" சான்றிதழ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்த "யுஏ" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 900 தியேட்டர்களில் விடாமுயற்சி திரையிடப்படுவதாக தெரிகிறது. கேரளாவில் 250, கர்நாடகாவில் 250, ஆந்திரா - தெலுங்கானாவில் 500, ஓவர்சீஸ் 1500, இது தவிர இன்னும் சில மொழிகளில் 250 தியேட்டர்களில் விடாமுயற்சி படத்தை திரையிட திட்டமிட்டுள்ளார்கள். அந்த வகையில் மொத்தம் 3650 தியேட்டர்களில் அஜித்தின் விடா முயற்சி வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!