
பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் மத கஜ ராஜா
அவற்றில் 14ம் தேதி "தருணம்" படத்தை ஓரிரு நாட்களில் தயாரிப்பாளர்களே திரும்பப் பெற்றுக் கொண்டு, இன்று ஜனவரி 31ம் தேதி மறு வெளியீடு செய்துள்ளார்கள். ஜனவரி 10ல் வெளியான "மெட்ராஸ்காரன்" படம் ஒரு சில நாட்கள் மட்டுமே ஓடியது. "வணங்கான்" படம் தற்போது சென்னை உட்பட சில நகரங்களில் மட்டும் ஓரிரு காட்சிகள் ஓடி வருகிறது.
12ம் தேதி வெளியான "மத கஜ ராஜா" படம் இப்போதும் குறிப்பிடத்தக்க அளவிலான தியேட்டர்களில் ஓடி வருகிறது. இப்படம் மட்டும்தான் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இன்று தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது.
14ம் தேதி வெளியான "காதலிக்க நேரமில்லை" மிகக் குறைவான தியேட்டர்களிலும், "நேசிப்பாயா" ஓரிரு காட்சிகளிலும் மூன்றாவது வாரத்தில் தொடர்கிறது. "நேசிப்பாயா" படம் தெலுங்கில் "பிரேமிஸ்தே" என்ற பெயரில் டப்பிங் ஆகி நேற்று வெளியானது.
பொங்கல் படங்கள் அனைத்தும் இன்னும் சில நாட்கள் மட்டுமே ஓடி முடியும். அடுத்த வாரம் பிப்ரவரி 6ம் தேதி அஜித் நடித்துள்ள "விடாமுயற்சி" வெளியாக உள்ளதால் அதற்குள் தியேட்டர்களை விட்டு தூக்கப்படலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!