
அரசியல் படம் - விஜய் வழியில் ரவி மோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின் நடிக்கும் கடைசி படமான "ஜனநாயகன்" படம் ஒரு அரசியல் படமாக உருவாகி வருகிறது. 2026 சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து அப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இப்படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர்கள் வெளியீடு சில தினங்களுக்கு முன்பு நடந்தது.
அந்த வரிசையில் அடுத்து ரவி மோகன் நடித்து வரும் புதிய படத்திற்கு "கராத்தே பாபு" என்று பெயரிட்டு டைட்டில் டீசர் ஒன்றையும் இன்று வெளியிட்டுள்ளார்கள். தமிழக சட்டசபையில் நடக்கும் ஒரு விவாதமாக அந்த டீசரில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு இது போல மேலும் சில அரசியல் படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!