
விடாமுயற்சி கதைச் சுருக்கம் : என்ன தெரியுமா ?
இப்படம் 1997ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான "பிரேக்டவுன்" என்ற படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா இல்லையா என்பது படம் வந்த பிறகு தெரிந்துவிடும்.
வெளிநாடுகளில் "விடாமுயற்சி" படத்திற்கான முன்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளது. அதற்கான முன்பதிவு இணையதளங்களில் இப்படத்தின் கதைச்சுருக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.
“திருமணமான ஒரு தம்பதியரின் பயணத்தில், மனைவி காணாமல் போய்விடுகிறார். காணாமல் போன மனைவியை வெறித்தனமாகத் தேடுகிறார் கணவன். அதே நேரத்தில் கண்ணுக்குத் தெரியாத எதிரி பல தடைகளை உருவாக்குகிறான்,” என கதைச் சுருக்கம் இருக்கிறது.
ஆக்ஷன், அட்வெஞ்சர் படமாக இப்படம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் டிரைலரைப் பார்த்த ரசிகர்களுக்கும் அது தெரிந்திருக்கும். ஒரு அதிரடிப் படத்தை இன்னும் ஒரு வாரத்தில் நாம் பார்த்து ரசிக்கலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!