
மொத்தமாக ஆக்கிரமிக்கப் போகும் விடாமுயற்சி
இந்த வருடத்தின் முதல் பெரிய படமாக வெளியாக உள்ள இப்படத்தை தமிழகத்தில் உள்ள 90 சதவீத தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது வேறு எந்தப் படமும் வெளியாகாது.
"விடாமுயற்சி" அடுத்த வாரம் வெளியானாலும் இந்த வாரமும், அடுத்த வாரத்திற்கு அடுத்த வாரமும் குறிப்பிடும்படியாக படங்கள் வெளியாகவில்லை. சுமார் 800 தியேட்டர்கள் வரை இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தைத் தமிழகம் முழுவதும் ரெட் ஜெயன்ட் வெளியிடுவதால் தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் இருக்காது.
இந்த மாதம் வெளிவந்த படங்களில் "மத கஜ ராஜா" மட்டுமே நன்றாக ஓடிய நிலையில் "விடாமுயற்சி" இந்த வருடத்தின் பெரிய வசூலை ஆரம்பித்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!