
இந்தியன் 3 - எதிர்பார்த்த வியாபாரம் நடக்குமா?
"இந்தியன் 2" படம் தயாரான போதே கூடுதலான காட்சிகள் வந்ததால் படத்தின் மூன்றாவது பாகத்தையும் வெளியிட திட்டமிட்டார்கள். இதனிடையே "இந்தியன் 2" படமும் தோல்வியடைந்து, "கேம் சேஞ்ஜர்" படமும் தோல்வியடைந்ததால் "இந்தியன் 3" படத்திற்கு வியாபார சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் என்ற "பிராண்ட் நேம்" இந்த இரண்டு படங்களில் மவுசு குறைந்துவிட்டது. அதனால், "இந்தியன் 3" படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று பேச்சு எழுந்துள்ளது. மேலும், "இந்தியன் 3" படத்தை முடிக்க இன்னும் சில பல கோடிகள் செலவு செய்தாக வேண்டுமாம். அமெரிக்காவிலிருந்து கமல்ஹாசன் திரும்பிய பிறகே "இந்தியன் 3" பற்றிய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!