
200 கோடி வசூலித்த சங்கராந்திகி வஸ்துனம்
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்க "கேம் சேஞ்ஜர்", அனில் ரவிப்புரடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்க "சங்கராந்திகி வஸ்துனம்". சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி பான் இந்தியா படமாக வெளியான "கேம் சேஞ்ஜர்" படம் இன்னும் 200 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது. அதே சமயம் 50 கோடி செலவில் தயாராகி தெலுங்கில் மட்டுமே வெளியான "சங்கராந்திகி வஸ்துனம்" படம் 200 கோடி வசூலைக் கடந்துவிட்டது.
தெலுங்கில் வெளியான ஒரு பிராந்தியத் திரைப்படம் ஒரே வாரத்தில் 203 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!