விஜய் 70 படத்தை இயக்கப் போகும் வெங்கட் பிரபு?
ஜன 20, 2025
Advertisement
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார். தீவிர அரசியலில் இறங்குவதால் சினிமாவில் இருந்து விலகுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார். தற்போது நடித்து வரும் விஜய் 69 படம்தான் அவருடைய கடைசி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்னும் ஒரு படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும் அதற்காக அவர் கதை எழுதி வருவதாகவும் சொல்கிறார்கள். விஜய் தற்போது நடித்து வரும் 69வது படம் இந்த வருட தீபாவளிக்கு வெளிவரலாம். அதன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடையும்.
அடுத்தாண்டு மே மாதம்தான் சட்டசபைத் தேர்தல் நடைபெறும். அதற்காக ஜனவரியில் இருந்து சுற்றுப் பயணம் செய்தாலே போதுமானது. மேலும் விஜய்யின் 69வது படம் தெலுங்கில் வந்த "பகவந்த் கேசரி" படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. தனது கடைசி படத்தை ஒரு நேரடிப் படமாக நடித்து முடிக்க விஜய் விரும்புகிறார் என்கிறார்கள். அதனால்தான் வெங்கட் பிரபுவை கதை எழுத சொல்லியிருக்கிறாராம். குறுகிய காலத்தில் அப்படத்தை எடுத்து முடிக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். "மாஸ்டர், லியோ" படங்களைத் தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இப்படத்தைத் தயாரிக்கலாம் என்று தகவல்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!