
விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர்
ஜன 18, 2025
Advertisement
‛அட்டகத்தி" படத்தின் மூலம் பிரபலமானவர் தினேஷ். தொடர்ந்து தமிழில் வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த "லப்பர் பந்து" படத்தின் வெற்றி அவரை அட்டகத்தி தினேஷ் என்பதை கெத்து தினேஷ் ஆக மாற்றியது. அந்தளவுக்கு அந்த படத்தில் கெத்து வேடத்தில் யதார்த்தமாக நடித்து அசத்தினார். இவரது நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் "கருப்பு பல்சர்". இதை முரளி க்ரிஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது என முதல்பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!