
விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி
மகிழ் திருமேனி தற்போது அளித்த பேட்டியில் கூறியதாவது, " ஒரு சமயத்தில் நடிகர் விஜயிடம் மூன்று கதைகளைக் கூறினேன். அவருக்கு மூன்று கதைகளும் பிடித்தது. அதில் ஒரு படத்தின் கதையை என்னையே தேர்வு செய்ய சொன்னார். நானும் தேர்வு செய்து கூறினேன். அவருக்கு பிடித்துப்போனது. ஆனால், உதயநிதியின் கலகத்தலைவன் படத்தை முடித்து பின் அடுத்த படத்தினை இயக்க செல்லுங்கள் என்றார். இதனால் தான் அந்த சமயத்தில் விஜய் படம் நடைபெறவில்லை. இன்னும் விஜய்க்கு அந்த மூன்று கதைகளும் காத்திருக்கிறது" என தெரிவித்தார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!