அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு
Advertisement
Advertisement
அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு
ஜன 15, 2025
அ நிறம் | அளவு
Advertisement
இறுகப்பற்று படத்தின் வெற்றிக்கு பிறகு ரெய்டு படத்தில் நடித்த விக்ரம் பிரபு அடுத்து சண்முகப்பிரியன் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். இந்நிலையில் தெலுங்கில் கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்து வரும் காதி என்ற படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. இன்று விக்ரம் பிரபுவின் பிறந்தநாளையொட்டி காதி படத்தில் அவர் நடித்துள்ள டெசி ராஜு என்ற கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த படம் வருகிற ஏப்ரல் 18ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!