
பொங்கல் போட்டியில் முந்தும் மத கஜ ராஜா
வெளியான ஆறு படங்களில் "மத கஜ ராஜா" படம்தான் ரசிகர்களின் வரவேற்பிலும், வசூலிலும் முன்னணியில் இருக்கிறது. 12 வருடங்களுக்குப் பிறகு வந்த ஒரு படத்திற்கு இப்படியான வரவேற்பு கிடைப்பது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. படம் வெளியான இந்த மூன்று நாட்களில் 10 கோடிக்கும் அதிகமான வசூலை இப்படம் கடந்துள்ளது.
முதல் நாள் வசூலை விடவும் அடுத்த இரண்டு நாட்களுக்கான வசூல் ஏறுமுகமாகவே உள்ளதாம். இந்த வாரம் முழுவதும் விடுமுறை தினம் என்பதாலும், அனைத்து சென்டர்களுக்குமான படமாக இது இருப்பதால் இன்னும் அதிக வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொங்கல் போட்டியில் "மத கஜ ராஜா" தான் வசூலில் முந்தி வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!