
இட்லி கடை படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது!
நடிகர் தனுஷ் தற்போது "இட்லி கடை" எனும் புதிய படம் ஒன்றை இயக்கி நடித்து வருகின்றார். "டான் பிக்சர்ஸ், வுன்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்" ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார்.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த ராஜ்கிரண் போஸ்டரை தொடர்ந்து தற்போது இட்லி கடை படத்திலிருந்து நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பொங்கல் பண்டிகையொட்டி படக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!