
மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா!
கடந்த 1995ம் ஆண்டில் சத்யா மூவிஸ் தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், ரகுவரன், நக்மா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் "பாட்ஷா". சமீபத்தில் பாட்ஷா திரைப்படம் வெளியாகி 30 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக போஸ்டர் வெளியிட்டனர். இந்த நிலையில் 30 ஆண்டுகள் நிறைவு பெற்றது மற்றும் சத்யா மூவிஸ் நிறுவனம் 60 ஆண்டுகள் எட்டியது ஆகியவற்றை கொண்டாடும் விதமாக விரைவில் "பாட்ஷா" படத்தை திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக 4K டிஜிட்டல் பொலிவுடன், டால்பி அட்மாஸ் சவுண்ட் தொழில்நுட்பத்திற்கான பணிகளை துவங்கி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!