
கேம் சேஞ்ஜர் முதல் நாள் வசூல் 186 கோடி
படத்திற்குத் சுமாரான வரவேற்புதான் கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் 186 கோடி என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவ்வளவு தொகையை முதல் நாளில் வசூலித்ததா என தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் இணையதளங்களே கேள்வியை எழுப்பியுள்ளன.
சமீபகாலங்களில் தெலுங்குத் திரையுலகத்தில் முதல் நாள் வசூல் என நிறைய சொல்வதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். சில இணையதளங்களில் முதல் நாள் வசூலாக மொத்தமாக 60 கோடிதான் வசூலித்திருக்கும் என்று செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். எதற்காக இவ்வளவு வித்தியாசம் கொண்ட தொகையை அறிவிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!