
நடிகர் முரளி, இளையராஜா - ஆச்சரிய ஒற்றுமை
ஜன 07, 2025
Advertisement
தமிழ் சினிமாவில் இயல்பான நடிகர் எனப் பெயரெடுத்தவர் மறைந்த நடிகர் முரளி. கன்னட இயக்குனர் சித்தராலிங்கையாவின் மகன். 1984ல் வெளிவந்த "பூ விலங்கு" படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். பல வெற்றிப் படங்களில் நடித்தவர். தனது 46வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.
முரளியின் மூத்த மகனான அதர்வா, "பாணா காத்தாடி" படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அவரது இளைய மகன் ஆகாஷ் முரளி ஜனவரி 14ல் வெளியாக உள்ள "நேசிப்பாயா" படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
முரளி அறிமுகமான "பூ விலங்கு" படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. அதர்வா அறிமுகமான "பாணா காத்தாடி" படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜாவின் மகன் யுவன்ஷங்கர் ராஜா. தற்போது ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகப் போகும் "நேசிப்பாயா" படத்திற்கும் யுவன் தான் இசை. முரளி குடும்பத்தில் அறிமுகமாகும் நடிகர்களுக்கு இளையராஜா குடும்பத்தினர் இசையமைத்திருப்பது ஒரு ஆச்சரிய ஒற்றுமை.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!